
முல்லைத்தீவில் முளைத்த பௌத்த விகாரை.
12.06.2025 08:48:06
முல்லைத்தீவில் (Mullaitivu) திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த உருவமானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உருவப்படங்களானது பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இனம்தெரியாத நபர்
இந்தநிலையில், நேற்று (11) இரவு குறித்த உருவமானது இனம்தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்டவிரோதமாக அமைக்கப்படுவது தொடர்பில் பலதரப்பட்ட பிரச்சினைகள் நகர்ந்து கொண்டிருக்கும் சந்தரப்பத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.