பொங்கலுக்கு டிவியில் வரும் 'அமரன்'

06.01.2025 07:00:00

பொதுவாக பண்டிகைகால விடுமுறை என்றாலே மக்கள் பலரும் டிவியில் எதிர்பார்ப்பது ஸ்பெஷல் நிகழ்ச்சிகளாக தான் இருக்கும். அதற்காகவே சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் மற்றும் புது படங்கள் என ஒளிபரப்புவார்கள்.

அந்த வகையில் வரும் பொங்கலுக்கு அமரன் படம் ஒளிபரப்பாக இருக்கிறது. 300 கோடி ரூபாய்க்கும் மேல் கடந்த ஆண்டு வசூலை குவித்த இந்த படத்தை விஜய் டிவி தான் பொங்கலுக்கு வெளியிடுகிறது.

அதற்கான ப்ரோமோவையும் விஜய் டிவி தற்போது வெளியிட்டு இருக்கிறது. இருப்பினும் அமரன் ஒளிபரப்பாகும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.