இஸ்­ரே­லிய கேணல், மேஜர் பணி நீக்கம்

08.04.2024 07:20:41

காஸாவில் தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் 7 பேர் கொல்­லப்­பட்ட தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்ட தனது படை அதி­கா­ரிகள் இருவரை பணி­நீக்கம் செய்­துள்­ள­தாக இஸ்ரேல் அறி­வித்­துள்­ளது.

காஸாவில் உணவுப் பொருட்­கள் விநி­யோ­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த, 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' எனும் அமெ­ரிக்க தொண்டு நிறு­வ­னத்தைச் சேர்ந்த ஊழி­யர்கள் பயணம் செய்த வாக­னத்தின் மீது கடந்த திங்­கட்­கி­ழமை (01) இரவு  இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தலால் 7 பேர் உயி­ரி­ழந்­தமை கடும் கண்­ட­னங்­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளது.

இத்­தாக்­குதல் தவ­று­த­லாக இடம்­பெற்­றது என இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு கூறினார். அதே­வேளை இத்­தாக்­கு­த­லுக்கு தான் மன்­னிப்பு கோரு­வ­தாக இஸ்­ரே­லிய ஜனா­தி­பதி ஐசக் ஹேர்ஸாக் தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில், இச்­சம்­ப­வத்தில் பல்­வேறு தவ­று­களும்  விதி­மு­றை­ மீறல்­களும் இடம்­பெற்­றுள்­ள­தாக இஸ்­ரே­லிய பாது­காப்புப்படை தெரி­வித்­துள்­ளது.

  ஹமாஸ் உறுப்­பி­னர்­களையே இலக்­கு­வைப்­ப­தாக  தாம் நம்­பி­ய­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் கூறு­கி­றது.

மேற்­படி ட்ரோன் தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்ட கேணல் ஒரு­வரும் மேஜர் ஒரு­வரும் பணி­யி­லி­ருந்து  நீக்­கக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் தென் பிராந்­திய தள­பதி உட்­பட சிரேஷ்ட அதி­கா­ரிகள் பலர் முறை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை அறிக்­கை­யொன்றின் மூலம்  தெரி­வித்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் குற்­ற­வியல் விசா­ரணை நடத்­து­வது குறித்து ஆராயும் பொறுப்பு இரா­ணுவ அட்­வகேட் ஜென­ர­லிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை தெரி­வித்­துள்­ளது.

3 பிரித்­தா­னி­யர்கள், ஒரு அவுஸ்­தி­ரே­லியர், போலந்து பிர­ஜை­யொ­ருவர், பலஸ்­தீனர் ஒருவர், அமெ­ரிக்க–- கனே­டிய இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை கொண்ட ஒருவர் மேற்­படி சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டனர்.

இன்­றுடன் 6 மாதங்கள் பூர்த்­தி­யாகும் காஸா யுத்­தத்தில் தனது தவ­றுகள் தொடர்­பாக இஸ்ரேல் மன்­னிப்பு கோரி­யமை அரி­தாகும். இந்த யுத்­தத்­தினால் காஸாவில் 33,000 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பெரும்­பா­லானோர் பொது­மக்கள் ஆவர்.

அமெ­ரிக்கா வர­வேற்பு

இதே­வேளை, தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் 7 பேர் கொல்­லப்­பட்­ட­மைக்கு இஸ்ரேல் முழு­மை­யாக பொறுப்­பேற்­பதை அமெ­ரிக்கா வர­வேற்­றுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் பெல்­ஜி­யத்தில்  செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், 'இஸ்ரேல் இச்­சம்­ப­வத்­துக்கு முழு­மை­யாக பொறுப்­பேற்­கின்­றமை முக்­கி­ய­மானது. இச்­சம்­ப­வத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை பொறுப்­பா­ளி­க­ளாக்­கு­வ­தற்கு இஸ்ரேல்  நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக  தென்­ப­டு­வதும் முக்­கி­ய­மா­னது' என்றார்.

விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்தல்

மேற்­படி சம்­பவம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு சுயா­தீன விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் கிரி­மினல் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என போலந்து வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இக்­கொ­லைகள் தொடர்பில் இஸ்ரேல் வழங்­கிய தக­வல்கள் போது­மா­ன­வை­யாக இல்லை என அவுஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வெளிப்­ப­டை­யான, சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என பிரித்­தா­னிய அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

காஸாவில் பொது­மக்கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கும் தொண்­டர்­களின் பாது­காப்­புக்கும் இஸ்ரேல் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் கடந்த வியா­ழக்­கி­ழமை பிர­தமர் நெதன்­யா­ஹு­வுடன் தொலை­பேசி மூலம் உரை­யா­டி­ய­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். காஸா­வுக்கு மேலும் அதிக நிவா­ர­ணங்­களை இஸ்ரேல் அனு­ம­திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதன்பின், காஸாவுக்கு தனது எல்லைகள் ஊடான விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக அனுமதிப்பதாக இஸ்ரேல் நேற்றுமுன்தினம் அறிவித்தது.

இதேவேளை, காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெறவுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் இதற்காக கெய்ரோ செல்வர்  என எதிர்பார்க்கப்படுகிறது.