சமையல் எரிவாயு தட்டுப்பாடு – ஒன்லைனில் விறகு விற்பனை!

18.08.2021 14:14:32

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மண் அடுப்பொன்றும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர், விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என கற்பனைகூட செய்யவில்லை என்றும் இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விறகு மூடைகளை விற்பனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.