நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சியினர் கையெழுத்து.

08.10.2026 09:02:59

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

 

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.