நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

19.01.2023 08:52:11

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.