"விஜய் ஒரு சுனாமினு அப்போவே சொன்னேன்" - மிஷ்கின்!
|
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்தித்தபோது அவர்மீது வந்த விமர்சனங்கள் பற்றியும், அதை எல்லாம் தாண்டி அவர் சாதித்தது பற்றியும் இயக்குனர் மிஷ்கின் பேசி இருக்கிறார். விஜய் ஒரு சீட் அல்லது ரெண்டு சீட் தான் ஜெயிப்பார் என சொன்னார்கள். நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் அரசியலுக்கு வந்தபோதே நான் என் அசிஸ்டண்டுகளிடம் சொன்னேன், இன்னொரு சுனாமி வருகிறது என்று. தேர்தலுக்கு முன் வெளிப்படையாக பேச முடியவில்லை. |
|
அவர் நிச்சயம் மேலே வருவார் என எனக்கு தோன்றியது. அவர் கடின உழைப்பாளி. சினிமாவில் இருக்கும்போது கால் ஷீட்டில் ஹீரோவாக இருந்தார். ஆனால் தற்போது வாழ்நாள் முழுவதும் ஹீரோவாக இருக்க போகிறார். அவருடன் ஒரு 80 நாள் பழகி இருக்கிறேன். தேர்தலுக்கு முன் சொல்ல வேண்டியது தானே என கேட்பார்கள். ஆனால் நான் apolitical, அதனால் அந்த நேரத்தில் அமைதியாக தான் இருக்க வேண்டும். எனக்கு உதயநிதி குடும்பத்தையும் தெரியும். நான் எந்த உதவி கேட்டும் அவரிடம் போகமாட்டேன். அவர் சிறந்த விஷயங்களை செய்ய போகிறார். விஜய்க்கு அனுபவம் இல்லை என சொல்கிறார்கள். அவர் உடன் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லித்தருவார்கள். |