இன்று கமல் கட்சியுடன் தொகுதி பங்கீடு!
|
திமுக இப்போது தனது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. வரிசையாக பல்வேறு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. மநீம தனது விருப்ப பட்டியலை திமுகவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதிமுக கூட்டணியை உறுதி செய்தாலும் இதுவரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தும் எனத் தெரிகிறது. ஆனால், மறுபுறம் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிறிய கட்சிகள் உடன் தொகுதிப் பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது. காங்கிரஸைத் தவிர பெரும்பாலான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சீராகவே போய்க் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் இன்றைய தினம் திமுக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. மநீம தனது விருப்ப பட்டியலை திமுகவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் மொத்தம் 15 தொகுதிகளைக் கொண்ட விருப்ப பட்டியலை திமுக தரப்பிடம் வழங்குகிறது. அதிக அளவில் கூட்டணிக் கட்சிகள் திமுகவில் இருப்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 140 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. |