ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
19.01.2021 08:34:25
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 25 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.