03 இலட்சம் பேரே ‘TIN’ இலக்கத்தைப் பெற்றுள்ளனர்!

30.10.2026 08:31:45

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள சுமார் 30 இலட்சம் பேர், வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான ‘TIN’ இலக்கத்தைப் பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்த சுமார் 1.7 கோடி பேர் வசிப்பதாக அத்திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான நந்தன குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் சில அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TIN இலக்கம் இல்லாதவர்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்றும் நந்தன குமார தெரிவித்துள்ளார்.