அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை

16.01.2022 05:33:43

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என மக்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட திஹாகொட பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் அரச உத்தியோகத்தர்கள் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.