அரசாங்கம் தற்போது தேர்தலுக்கு செல்லாது!

19.07.2026 11:49:07

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் வினைத்திறனான நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை. பாராளுமன்ற செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையில்லை. காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

    

 

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசாங்கம் பேச்சளவில் மாத்திரமே குறிப்பிடுகிறது.செயல் அளவில் ஒன்றும் நடப்பதில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழு தொடர்பில் நம்பிக்கையில்லை.காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. தேர்தலை நடத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

செயற்குழுவில் முன்வைக்கப்படும் யோசனைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.

மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு உள்ளது என்று குறிப்பிடும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மக்கள் தமது அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள்.அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதால் அரசாங்கம் தற்போது தேர்தலுக்கு செல்லாது என்றார்.