தவெக ஜே.சி.டி.பிரபாகர் பகீர் தகவல்!
|
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களம் அனல் பறக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த ஜே.சி.டி பிரபாகர், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடிகர்கள் அரசியலில் இருக்கும் சிக்கலை பிளாஷ்பேக்குடன் நினைவு கூறியுள்ளார். தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஜே.சி.டி பிரபாகர், "ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். |
|
1972 ஆம் ஆண்டு நான் இயக்கத்தில் இணைந்தபோது லயோலா கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் ஆரம்பிப்பதற்காக எம்ஜிஆரை அழைத்து வரத்திட்டமிட்டேன். அப்போது காவல்துறையினர் வந்தனர். 'எம்ஜிஆரை அழைக்க கூடாது' என்று கூறினார்கள். 'நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் விரும்பவில்லை' என்று சொன்னார்கள். அதிகாரிகள் மிரட்டல் நான் நடத்துவேன் என்று கூறினேன். ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்க அவர் திருக்கரத்தால் நிதி கொடுத்துள்ளார். நிச்சயம் நடத்துவேன் என்றேன். 'வேலை கிடைக்காது, எதிர்காலம் வீணாகிவிடும்' என்று எல்லாம் மிரட்டினார்கள். நான் 'இத்தோடு படிப்பே நின்றால் கூட பரவாயில்லை அவர் பக்கம் நிற்பேன்' என கூறினேன். என் அப்பா, அம்மாவிடம் மகன் எதிர்காலம் போய்விடும். குடும்பமே பாதிக்கப்படும் என மிரட்டினார்கள். அதற்கு என் பெற்றோர், 'என் மகன் திருடினாலோ, கொலை செய்தாலோ நிச்சயமாக தண்டனை கொடுக்கலாம். எந்தத் தவறும் செய்யாமல் ஒரு தலைவர் பின்னால் செல்வதை விரட்டுவதை ஏற்க முடியாது. என் மகன் செய்வது நியாயம் என்று அவர் பக்கம் நிற்போம்' என்று கூறினர். லயோலோ கல்லூரி வளாகத்தில் ஒரு அதிகாரி என்னை தனியாக அழைத்து சென்று, நீங்கள் எல்லாம் படித்தவர்கள். எதற்காக இந்த நடிகரின் பின்னால் செல்கிறீர்கள். கோட்டை இல்லை அவருக்கு என்ன கொள்கை, கோட்பாடு உள்ளது என்று கேட்டேன். அவரிடம் நான், பொது வாழ்க்கைக்கு வருவோர் நல்லவராக இருக்க வேண்டும். நான் பார்க்கும் நல்லவர் எம்ஜிஆர். அதனால் அவர் பின்னால் நிற்கிறேன் என கூறினேன். 1972க்கு பிறகு மக்கள் கண்டறிந்த நல்ல வல்லமையான தலைமை தான் விஜய். சென்னை மாநகரம் வீழ்த்த முடியாத கோட்டை இல்லை. ஒரு மாபெரும் மக்கள் சக்தி உங்களிடம் உள்ளது. உங்கள் முயற்சியால் முடியாதது எதுவுமில்லை. சென்னை வீழ்ந்தால் தமிழ்நாடு வீழும். தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் ஊக்கம் பெறுவார்கள். இங்குள்ள மாவட்டச் செயலாளர்கள் பொருளாதார சிக்கல், தியாகம் உள்ளிட்டவற்றை கடந்து வந்துள்ளனர். இந்தியா கண்டிராத வெற்றியை பெற்று தவெக ஆட்சி அமைக்கும்" என்றார். |