இலங்கைக்கு ஈரான் துணை நிற்கும்!
24.04.2024 15:01:31
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஈரான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் முன்னேற்றத்துக்காக பாரிய திட்டங்களில் இலங்கையுடன் ஈரான் துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.