பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவின் தேசிய தலைநகரில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதர் மேரிஸ் பாடசாலை, பிரிட்டிஷ் பாடசாலை, சல்வான் பப்ளிக் பாடசாலை, டெல்லி பப்ளிக் பாடசாலை மற்றும் கேம்பிரிட்ஜ் பாடசாலை உள்ளடங்கலாக பல பாடசாலைகளுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பட்டனர்.
அந்த மிரட்டல் மின்னஞ்சலில்,
“நான் பாடசாலை கட்டிடங்களுக்குள் பல வெடிகுண்டுகளை வைத்தேன். வெடிகுண்டுகளின் அளவு சிறியதாகவும், நன்றாக மறைக்கப்பட்டதாகவும் உள்ளது.
இதனால் கட்டிடத்திற்கு அதிக சேதம் ஏற்படாது, ஆனால் வெடிகுண்டுகள் வெடிக்கும்போது பலர் காயமடைவார்கள்.
வெடிப்பைத் தடுக்க 30,000 அமெரிக்க டொலர்கள் தொகையைக் கோருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாடசாலை நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
டெல்லி பொலிஸார் தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் படை, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மற்றும் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பாடசாலைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.