
விமான இயந்திரத்தில் பற்றிய தீ,
அமெரிக்காவில் பறவை மோதலால் FedEx சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீ பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 1, 2025 அன்று புறப்பட்ட ஃபெடெக்ஸ்(FedEx) சரக்கு விமானம் (Boeing 767, flight FX3609), பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
இந்தியானாபோலிஸ்(Indianapolis) நோக்கிச் சென்ற போயிங் 767 விமானம் (விமான எண் FX3609) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெவார்க்கிலிருந்து இந்தியானாபோலிஸ் நோக்கிச் சென்ற விமானம், பறவையுடன் மோதியதால் இயந்திரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பிடித்தது. விமான ஊழியர்கள் திறமையாக செயல்பட்டு அவசர தரையிறக்கம் செய்தனர். இய்ஹில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானப் பாதுகாப்பில் பறவை மோதல்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் யு.எஸ். டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) அறிக்கைகளின்படி, இதுபோன்ற சம்பவங்களால் விமான நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான பறவை மோதல்கள் சிறிய சேதங்களையே ஏற்படுத்துகின்றன என்றாலும், இந்த சம்பவத்தில் பார்த்தது போல், தீவிரமான அவசர நிலைகளுக்கும் வழிவகுக்கும். |