எம்.பியாகும் பசில் ராஜபக்ஷ

25.06.2021 08:36:27

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான பசில் ராஜபக்ஷ, வருகின்ற ஜுலை மாதம் 06ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த தகவலை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரானப் பதவிப்பிரமாணம் செய்துகொள்கின்ற அதே நாளிலேயே மாலை பஷில் ராஜபக்ஷ, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் பண்டார இராஜினாமா செய்யப்போவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.