டொலர் நெருக்கடி; கடனுக்காக கையேந்தும் இலங்கை அரசாங்கம்!

19.12.2021 12:27:52

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கடன் வாங்குதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயம் வெற்றியடைந்துள்ளதாகவும், சுமார் 140 கோடி அமெரிக்க டொலர்களை நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும், கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படாமல் சலுகை முறையில் பரிவர்த்தனை செய்ய உத்தேசித்துள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.