
ஐரோப்பிய நாடொன்றில் 15 பேர்களை பலிவாங்கிய கோர விபத்து!
லிஸ்பனில் சுற்றுலாப் பயணிகளுடன் கேபிள் கார் ஒன்று தடம் புரண்டு ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் பதினைந்து பேர் மரணமடைந்ததுடன் குறைந்தது 18 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். போர்த்துகீசிய தலைநகரின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றான குளோரியா ஃபுனிகுலர் விபத்தில் சிக்கியதில், பயணிகள் மற்றும் ஒரு வழி போக்கரின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளது. |
அந்தரத்தில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, அதிக வேகத்தில் தரையில் விழுந்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், ஒரு பாதசாரி அந்த வண்டி மோதியதால் நசுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், கேபிள் அறுந்ததாலையே விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க துணை மருத்துவர்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 62 மீட்புப் பணியாளர்களும் 22 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளனர், அதில் ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான காயங்களுடன் தப்பியவர்களில் 3 வயது குழந்தை ஒருவர் என்றே கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வ்ரிவான அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்து பொலிசார் தகவல் ஏதும் வெளியிடவில்லை. |