கூடைப்பந்து போட்டி; ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன்

17.09.2022 10:50:59

தென்னிந்திய சீனியர் கூடைப்பந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்திய கூடைப்பந்து கழகம், புதுச்சேரி கூடைப்பந்து கழகம் சார்பில் தென்னிந்திய சீனியர் கூடைப்பந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 12 அணிகள் பங்கேற்றனர்.
 தென்னிந்திய சீனியர் கூடைப்பந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. புதுச்சேரி: இந்திய கூடைப்பந்து கழகம், புதுச்சேரி கூடைப்பந்து கழகம் சார்பில் தென்னிந்திய சீனியர் கூடைப்பந்து போட்டி உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 12 அணிகள் பங்கேற்றனர்.

நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா-புதுச்சேரி அணிகள் மோதின. இதில் 68-30 என்ற புள்ளி கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின. இதில் 83-67 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் அணிவித்து கோப்பை வழங்கினார்.