இங்கிலாந்தில் 2000 போலி தடுப்பூசிகள் பறிமுதல்!

25.10.2025 09:10:30

இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய பறிமுதல் என்று கூறப்படுகிறது.

உரிமம் பெறாத பொருட்களை தயாரித்து விநியோகித்த சட்டவிரோத செயற்பாடுகளை அழிக்க இங்கிலாந்தின் மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து செயற்படும் நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மவுஞ்சாரோவில் காணப்படும் ஒரு மூலப்பொருளான டிர்செபடைட்( tirzepatide) என்ற மருந்து நாக்-ஆஃப் (knock-off pens) பேனாக்களில் இருப்பதாக பெயர் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இந்த மருந்தின் பின்னணியில் உள்ள நிறுவனமான எலி லில்லி, ஒழுங்குபடுத்தப்படாத சட்டவிரோத சந்திகளில் இருந்து இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்த எவருக்கும் அவற்றில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை அறிய வழி இல்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு போலி தடுப்பூசிகள் பறிமுதல் செய்யாடுவது இங்கிலாந்தில் இது முதல் தடவை.

இதேவேளை, இந்த சோதனையில் மூல இரசாயனங்கள், உபகரணங்கள், பல்லாயிரக்கணக்கான வெற்று பேனாக்கள் மற்றும் £20,000 பணமும் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டது.

 

பறிமுதல் செய்யப்பட்ட போலி தடுப்பூசிகளின் பெறுமதி சுமார் £250,000 என தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, “விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக ஆபத்தான மற்றும் சட்டவிரோத எடை இழப்பு மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் உயிர்களை ஆப்பத்துக்கு தள்ளும் குற்றவாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு வெற்றி” என்று சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் கூறியுள்ளார்.