ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு- கொரோனா நோயாளிகள் மேலும் 25 பேர் பலி - டெல்லி

24.04.2021 11:52:38

 

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படடன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்- மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமானப் படைகள் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் வினியோக பணியில் ஈடுபட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து நாடுமுழுவதும் ஆக்சிஜன் வினியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரெயில்களில் ஆக்சிஜன் கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் பணி அதிகரித்து உள்ளது. காலியான ஆக்சிஜன் கண்டெய்னர்களை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகளில் இந்திய விமானப்படையின் பெரிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளை சேர்க்க மறுக்கப்படுகிறது. இதனால் பலர் உயிருக்காக போராடும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது.