வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் மரணம்

28.08.2021 07:00:00

வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர். 
அவர்களில் ஒருவர் வீட்டிலேயே மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவத்தில் கனகராயன்குளம், தோணிக்கல், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே மரணமடைந்துள்ளனர்.