மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்
25.12.2020 11:57:03
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
அதன்பின்னர் அவர் கூறியதாவது:
* புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன்.
* தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்துத் தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.