ஒலிம்பிக்ஸ் டிக்கெட் விற்பனையில் சாதனை

27.07.2024 08:35:22

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது