சிவகாசியில் நில அதிர்வு!

30.01.2026 08:59:50

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நொடிகளுக்கு மட்டுமே நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், செங்குளம், பட்டாக்குளம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.