10 ஆண்டுகள் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு சிறை !

01.04.2021 10:39:59

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீர் பகுதியில் செயற்பட்ட பயங்கரவாதிகளான பஹதூர் அலி, மற்றும் அவரது உதவியாளர்களான அபு சாத் , அபு தர்தா ஆகியோர் ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள்  ஊடுறுவினர்.

அவர்களில் பஹதூர் அலி கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உதவியாளர்கள் 2017 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பஹதூர் அலிக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.