நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் அறிவிப்பு!

04.04.2025 08:15:25

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது.

பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது

அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பின்னர் பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

அதன் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 26 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் கொத்மலை மற்றும் மஸ்கெலிய பிரதேச சபைகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த இரண்டு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாத்தளையில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,மன்னார் மாவட்டத்தில் 08 வேட்பு மனுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது