உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகின!
05.07.2026 13:28:21
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளைத் தெரிந்துகொள்ள, தேர்வுகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்குச் சென்று, தமது பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தேடிக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.