இந்தியா நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது !

29.03.2021 09:56:30

ஒரு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இந்திய இராணுவம் சார்பில்  நேபாள இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா மூலம் கொண்டு செல்லப்பட்ட குறித்த கொரோனா தடுப்பூசிகள், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேபாள இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 10 இலட்சம் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.