உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படவில்லை

23.07.2021 10:24:03

 

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான கணிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் என மாநில அரசுகள் தகவல்களை சேகரிக்கின்றன. அவ்வாறு மாநில அரசுகளின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதனால் எந்த நிலையிலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் விபரங்களை குறைத்து காட்ட முடியாது எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, பீஹார் மத்திய பிரதேசம் என சில மாநிலங்கள் விடுபட்டு தகவல்களையும் சேர்த்துள்ளன. கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பது 1.45 சதவீதமாக இருந்தது. கடந்த மே மாத இறுதியில் 1.34 வீதமாக இருந்துள்ளது எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதை விட 40 இலட்சத்தை கடந்திருக்கலாம் என ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.