இன்று நண்பகல் பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

29.11.2021 06:40:45

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நண்பகல் நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.

ரயில்வே, தபால், சுகாதாரம் மற்றும் நிர்வாக சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன.

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தும் முடிவை இரத்து செய்ய வேண்டும், அதே நேரத்தில் சம்பளத்தை ரூ.10ஆயிரத்தால் அதிகரித்து, கௌரவமான அரச பணியை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் எவ்வித நிவாரணமோ அல்லது சம்பள அதிகரிப்போ வழங்கவில்லை என அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசுத் துறை ஊழியர்களின் வாயை அடைக்கும் வகையில் உள்துறைச் செயலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் போராட்டத்தை தீவிரப்படுத்த தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.