
சந்தோஷ் ஜா - ராஜபக்ஷ சந்திப்பு
05.02.2025 08:14:39
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.