காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு
26.08.2023 15:54:18
சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளது.