86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நெதர்லாந்து மத்திய வங்கி!
|
அரசியல் பதற்றம் காரணமாக நெதர்லாந்து தங்கக் கையிருப்பு லண்டனுக்கு மாற்றபட்டது. நெதர்லாந்து மத்திய வங்கி (De Nederlandsche Bank – DNB) உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது தங்கக் கையிருப்பில் பெரும் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 2026 மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் இருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டது. |
|
இந்த நடவடிக்கை, அவசரத் தயாரிப்பு (crisis preparedness) என வங்கி விளக்கமளித்துள்ளது. தங்கம் உலகளாவிய நம்பிக்கையின் அடையாளமாகவும், கடுமையான நெருக்கடிகளில் பாதுகாப்பான கையிருப்பாகவும் கருதப்படுகிறது. லண்டனில் உள்ள Bank of England தங்கம் சர்வதேச வர்த்தக தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், அவசர சூழ்நிலையில் விரைவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. முன்பு, நியூயார்க் 31.3 சதவீதம் மற்றும் ஒட்டாவா 19.7 சதவீதம் தங்கக் கையிருப்பை வைத்திருந்தது. மாற்றத்திற்குப் பிறகு, இரண்டிலும் 18.5 சதவீதம் மட்டுமே உள்ளது. தற்போது, லண்டனில் 32.1 சதவீதம், Zeist (நெதர்லாந்து) 30.8 சதவீதம், நியூயார்க் 18.5 சதவீதம், ஒட்டாவா 18.5 சதவீதம் என தங்கக் கையிருப்பு சமமாகப் பகுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, நெதர்லாந்து 612.4 டன் தங்கம் வைத்துள்ளது. 2025 இறுதியில் இதன் மதிப்பு 72.2 பில்லியன் யூரோ (சுமார் $83.6 பில்லியன்) ஆகும். இதில், 27 டன் தங்கம் நேரடியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து நெதர்லாந்தின் Zeist நகரில் உள்ள பாதுகாப்பான களஞ்சியத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதே அளவு தங்கம் Zeist-இல் இருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது. மேலும், நியூயார்க்-இல் இருந்த 59 டன் தங்கம் விற்கப்பட்டு, அதே அளவு லண்டனில் வாங்கப்பட்டது. இந்த நடவடிக்கை, உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார அசாதாரண நிலைகளுக்கு எதிராக நெதர்லாந்து எடுத்த முக்கியமான பாதுகாப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது. |