பிரான்சுக்கு செல்கிறார் அனுர!

26.06.2026 15:00:00

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கு பிரான்ஸ் நாட்டின் முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவை குறித்து இந்த பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனங்களில் ஒன்றான CMA CGM-இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடால்ப் சாடேவுக்கும், ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இப்பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாக அமையும். இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் பிரெஞ்சு வணிகங்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட, இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லம்பேர்ட், திட்டமிடப்பட்ட இந்த சந்திப்பை உறுதிப்படுத்தினார்.