உலகில் தூய தங்கத்தை உற்பத்தி செய்யும் 6 நாடுகள்!

03.11.2025 14:09:27

உலகில் 100 சதவீதம் தூய தங்கம் தயாரிக்க முடியாது என்றாலும், 999.99 சதவீதம் தூய்மையை அடையும் தங்கத்தை சில நாடுகள் மிக உயர்ந்த தரத்தில் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த தரமான தங்கம், நகை மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக உலகளவில் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கே அந்தத் தங்கத்தை உற்பத்தி செய்வதில் 'தூய்மையின் உச்சம்' என அழைக்கப்படும் 6 நாடுகள் குறித்து பார்ப்போம்.

    

 

1. சீனா

தங்க உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் சீனா, மேம்பட்ட சுரங்க தொழில்நுட்பம் மற்றும் நவீன சுத்திகரிப்பு முறைகள் மூலம் மிக உயர்தர தங்கத்தை உருவாக்குகிறது. அரசு மற்றும் தனியார் மின்ட் நிறுவனங்கள் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்கின்றன.

2. சுவிட்சர்லாந்து

தங்க சுத்திகரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து, சொந்த சுரங்கங்கள் இல்லாதபோதிலும், உலகம் முழுவதிலிருந்தும் தங்கத்தை இறக்குமதி செய்து 99.99 சதவீதம் தூய்மையுடன் சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்கிறது.

3. அவுஸ்திரேலியா

பெர்த் மின்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் தங்கத்தின் தரம் மற்றும் நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் அவுஸ்திரேலியா, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுரங்கங்களை பயன்படுத்தி உயர்தர தங்கத்தை உருவாக்குகிறது.

4. அமெரிக்கா

நெவாடா மாநிலத்தில் அதிகமாக தங்கம் சுரங்கப்படுத்தப்படும் அமெரிக்கா, அரசு மின்ட் நிறுவனங்கள் மூலம் தரமான தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை உருவாக்குகிறது.

5. கனடா

மேற்கு பகுதிகளில் தங்க சுரங்கங்கள் அதிகம் உள்ள கனடா, Royal Canadian Mint மூலம் தூய்மையான மற்றும் நம்பகமான தங்கத்தை வழங்குகிறது. அரசு சான்றிதழ்கள் மற்றும் நெறிமுறைகள் மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது.

6. ரஷ்யா

சைபீரியா மற்றும் கிழக்கு ரஷ்யாவில் உள்ள பாரிய சுரங்கங்கள் மூலம் தங்கம் சுரங்கப்படுத்தப்படும் ரஷ்யா, உலக தங்க சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நாடுகள், தங்கத்தின் தரம் மற்றும் தூய்மையில் உலக அளவில் முன்னிலை வகிக்கின்றன.