வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாவிற்கு பலி!

09.09.2021 05:40:34

வவுனியாவில் நேற்று (08) இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.
குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தனர்.