பாலியல் வன்கொடுமை- மாணவர் கைது

08.05.2022 11:27:50

கேரள மாநிலம் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு பாலக்காட்டைச் சேர்ந்த காளிதாசன், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாலாரி வட்டத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து சீனியர் மாணவியை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று முன்தினம் தான் பாலாரிவட்டம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மாணவர் காளிதாசனை கைது செய்தனர்.

இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.