விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா

19.10.2021 07:53:45

விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் மரணமடைந்திருந்தான்.

சிறுவன் பயணித்த மோட்டார்சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

குறித்த சிறுவனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.