உண்மையை உடைத்த அனில் கும்ப்ளே
01.12.2021 10:01:09
கே.எல்.ராகுலை தக்க வைக்காததற்கான பின்னணி காரணத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர் அனில் கும்ப்ளே வெளிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் கேப்டன் கே.எல்.ராகுலை தக்க வைக்காததற்கான காரணத்தை அணியின் இயக்குநர் அனில் கும்ப்ளே வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் ஆணி வேறாக கே.எல்.ராகுல் திகழ்ந்தார். நான் பஞ்சாப் அணியின் இயக்குநராக பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
உண்மையில், கே.எல்.ராகுலை தக்க வைத்து, அவர் தலைமையில் அணியை தொடரருவதே பஞ்சாப் அணியின் நோக்கமாக இருந்தது.
ஆனால், மீண்டும் ஏலத்திற்கு செல்ல வேண்டும் என அவர் தான் முடிவு செய்தார்.