இந்திய ராணுவ தளபதி இன்று இலங்கைக்கு விஜயம்

12.10.2021 09:04:05

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (11) இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்கத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.