விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா?

02.07.2024 00:53:24

விஜய்யின் 69வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை தீரன், துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தின் நடிகை மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அதை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். நேற்று முன் தினம் பத்து மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். மிகவும் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல மணிநேரம் கால்கடுக்க நின்று மாணவர்களிடம் பேசினார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் களமிறங்க இருப்பதால், கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார்.