துவக்க வாய்ப்பு: இஷான் எதிர்பார்ப்பு
10.10.2021 12:40:53
‘‘உலக கோப்பையில் (‘டி–20’) துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக,’’ இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
இந்திய ‘விக்கெட் கீப்பர் பேட்டர்’ இஷான் கிஷான் 23. எமிரேட்சில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., சீசனில் ‘பார்மின்றி’ தவித்த இவர், பஞ்சாப் (50 ரன், 25 பந்து), ஐதராபாத் (84 ரன், 32 பந்து) அணிகளுக்கு எதிராக எழுச்சி கண்டார். வரும் அக். 17ல் எமிரேட்ஸ், ஓமனில் துவங்கவுள்ள ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.