உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி .

11.05.2025 09:41:35

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

பல சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெரும் கட்சிகளே ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால், அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம் என தெரிவித்தார்.