’’கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகி விட முடியாது’’.
13.03.2026 08:17:33
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஆனால் அதே திமுக குடும்பம் ரஜினிகாந்திற்க்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்து கொண்டனர். இன்று என்ன ஆனது.. கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்க போய்விட்டார்” என்று கூறினார்.