2026ஆம் ஆண்டில் இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4% வீதம் சரிவு!
30.05.2026 13:04:25
|
2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இதுவரை 5.4% வீத சரிவை எதிர்கொண்டுள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையின்படி, மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது. |
|
2026ம் ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ செலாவணிக் கையிருப்பு தற்காலிகமாக 6.77 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீன மக்கள் வங்கியுடனான கடன் வசதியின் மூலம் கிடைக்கும் டொலர் உட்பாய்ச்சலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |