விஜயை விளாசிய ஸ்டாலின்.
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது
:
சினிமாவில் ஹீரோவாக இருந்தவர் அரசியலிலும் அப்படியே இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறால் தமிழ்நாடு பல பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறது. தேர்தலுக்கு முன் இப்போதைய முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த போது சட்டம் ஒழுங்கு சரி இல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசித்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது அவரது ஆட்சியில் ஓட ஓட விரட்டிக் கொலை.. இரட்டைகொலை, சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போவது, சிறைக்கதிகள் தப்பி செல்வது, பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டி கொலை, கொலை செய்துவிட்டு சாதாரணமாக செல்லும் காட்சிகளை எல்லாம் நடக்கிறது..
இந்த செய்திகளையெல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா? இல்லையா? இந்த செய்தி அவர் காதுக்கு போகிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. ஏனெனில், எதுவுமே நடக்காத மாதிரிதான் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது. அவரை யாருமே சுலபமாக அணுக முடியவில்லை.
இது தொடர்பாக பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும் கூட அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சொந்த புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் ஒழுங்கை சீரழித்து விட்ட சோப்பலாங்கி அரசாக இருக்கிறது. முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்பு முயற்சி செய்வோம்.. ஆளத்தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம்’ என அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.