ஜப்பானால் அனுப்பப்பட்ட விண்கலம் தொடர்பில் அறிவிப்பு!

20.01.2024 17:47:56

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில்  “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது.

இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதுடன் 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது.

இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.