உறங்கிய நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்!

02.09.2021 05:49:00

சூரியவெவ– மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்ருந்த நிலையில் பெண்ணொருவர்   புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

 குறித்த பெண் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

 கொலை செய்யப்பட்ட பெண் 34 வயதுடையவர் எனவும் பல வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்த நிலையில் தன் 17 வயதான மகனுடன் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மே ற்கொண்டு வருகின்றன.